History

Hi2world இன்று எல்லாருடைய மத்தியில் தெரிந்த மிகவும் பிரபலமடைந்து காணப்படுகின்ற ஒரு தமிழ் அரட்டை அரங்கம். Hi2world இனுடைய இந்த நிலைக்கு யாவருமே காரணம். எமது இந்த இணையத்தளம் உலகத்தில் எந்த மூலையிருந்தும் எந்த மூலையிருக்கின்ற ஒருவரை இல்லை பலரை ஒன்று சேர்த்து வருகின்ற ஒரு பிரமண்டமான கூட்டுக்குடுப்பம்.

இதைப் பற்றி சொல்லது கடினம். ஏராளம். அதில் சிலவற்றை இங்கே கூறுகிறேன்.

ஆரம்பம்

Hi2world ஆரம்பமாகி பலவருடங்கள் ஆகின்றன. 2003 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ம் திகதியே இதன் முதல் ஆரம்ப நாள். ஆரம்ப நாள் முதல் பல கஸ்டங்களை கடந்து இன்று தனக்கென்றே ஓர் தனி இடத்தை அமைத்து கூட்டுக்குடும்பமாக இன்று வாழ்ந்து வருகிறது எமது ஹய் 2. அதன் அடிப்படையில் பலருடைய ஒத்துழைப் பெற்று தன்னிகரற்ற வழியில் மேல் நோக்கி இன்று பல உறவுகளை அழைத்து தன்னிடத்தே இணைத்து வருகிறது.

Hi2world ஆரம்பிக்க ஏன் தோன்றியது? ஏன் ஆரம்பத்தது?

நான் எனது 14 வயதிலிருந்தே இணையம் உலாவுவது வழக்கம். அதிலும் எனக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த விடயங்களை அலசி ஆராய்வதில் மிகவும் ஆர்வம். என்னுடைய 14 வயதில் (1999) ஆண்டு தகவல் இணையம் சார்ந்த தகவல்களை மக்கள் அறிய ஆரம்பித்த நேரம். அன்று அதைப்பற்றி யாவரும் நன்றாக திறன் அற்று இருந்த காலம். ஆனால் எனக்கு இயைத்தை பாவிக்கும் வசதிகள் அற்ற நிலையிருந்தாலும் நான் பல இடங்களில் சென்று பார்வையிட்டு வருவதுண்டு. 2000 ம் ஆண்டில் முதன் முறையாக ஒரு தனியான இணையத்தளத்தை ஆரம்பித்தேன். பின்பு அதை வைத்தே பல விடயங்களை அறிந்தேன். மேலும் எனக்கு சுவாரிசமான பல தகவல்களை அறிய அது உதவியது. அதனை வைத்து 2001 ம் ஆண்டு பாடல் தொகுப்புகளைக்கொண்ட ஓர் இணையத்தளத்தை ஆரம்பித்தேன். அது மிகவும் பிரமலமடைந்தது. பின்பு 2002 ம் ஆண்டு அது முதலாவது பிறந்த தினத்தையும் மிகவும் சிறப்பாக கொண்டாடியது. பின்பு 2003ம் ஆண்டு ஆரம்பத்தில் அது என்னை விட்டு போக வேண்டிய நிலையில் நான் அதை இழந்து விட்டேன். அது என்று ஒரு பெரிய வீழ்ச்சியாகவே இருந்தது. பல கஸ்டங்களில் மத்தியில் பலதை அனுபவித்து அதை ஆரம்பித்த எனக்கு சிலருடைய பல திருட்டு வேலைகளால் அதை இழுக்க வேண்டியிருந்தது.

அதன் பின் நான் 6 மாத காலம் இணையத்தை பாவிக்கவில்லை. ஏனென்றால் எனக்கு இன்டநெற் வெறுத்து அதை பாவிக்கவே விருப்பமற்று போய்விட்டது. என்னிடம் இருந்த பெரிய நண்பர்கள் (வெளிநாடு இன்டர்நெற் நண்பர்கள்) கூட்டத்தையே அப்படியே இழந்தேன்.

மீண்டும் 2003 ம் ஆண்டு செப்டம்பர் மாத் இணையத்தை பாவிக்கும் கட்டாயம் நேர்ந்தது. நான் யுனிவர்சிட்டியில் இணைந்த நாட்கள் அவை. அதன் போது என்னை அறியாமல் பல கற்பனைகளில் ஊறிய எனக்கு மீண்டும் இன்னொறு இணையத்தளம் ஆரம்பித்து அதை விட பிரபலமானதாக கொண்டு வரலாம் என்ற உறுதி இருந்தது. அதன்பின்னர் 2003 ஒக்டோபர் மாதம் காதல்ஒன்லைன்.கொம் என்ற பெயரில் ஆரம்பித்து சட், சினிமா விடயங்கள் உள்ளட்கியதாக வெளியிட்டேன். அது ஓரளவிற்கு பாவனையார்கள் மத்தியில் பிரபலமடைய மீண்டும் வெவ்வேறு பல இணையத்தளங்களை உருவாக்கிறேன். பல கஸ்டங்களை தாண்டிய எனக்கு 2004 ம் ஆண்டு குட்லங்கா என்ற பெயரில் எமது சட் ரூம் ஐ தனியாக அந்த இணையத்தில் ஆரம்பித்தேன். ஆனால் அதன் சட் ரூம் பல கஸ்டங்களை தந்திருந்ததால் 2005 ஆம் ஆண்டு ஹய் 2 வேட்ல் என்று சட் ரூம் பக்கத்தை தனியாகவே கொண்டு வந்தேன்.  அது பல கிளைகளாக இன்று ஆரம்பித்து இருக்கிறன்றது.

CHAT ஆரம்பித்த காலத்தில் எப்படி CHAT RUN ஆகியது? User எப்படி வந்தார்கள்?

ஆரம்பத்தில் மிகவும் பல கஸ்டங்களை கண்ட எமது சட், இருந்தும் இடைவிடாமல் இயங்கியது. அன்றைய சூழ்நிலையில் எல்லாருடைய மத்தியில் அதை தெரியப்படுத்துவது கடினமாக இருந்தது. ஆனால் என்னுடைய ஓரு இணையத்தம் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) மற்றும் லங்காசிறி இணையத்தளம் மூலம் பாவனையை அதிகரிக்க வைத்தது.

ஆரம்பத்தில் யார் உதவியாக இருந்தது? யார் என்னுடைய இருந்தது?

ஆரம்பத்தில் உதவியாக யாருமில்லை. என்னுடன் யாருமில்லை. எல்லாம் நானாகவே செய்தேன். சட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூட யாரும் அமர்த்தப்படவில்லை. நானே நேரமிருக்கும் போது பார்பதுண்டு. ஆனால் எனக்கும் அரட்மை அடிப்பதற்கும் வெகு துாரம். ஆனால் 2003ம் ஆண்டு என்னுடன் என் தம்பி சஞ்சய் இரந்தான். அனை நான் பாவனையாளர்களை கட்டுப்படுத்த அமர்த்தியருந்தேன். அவனுடைய உதவிகள் இருந்தன. ஆனால் குறிகிய காலத்தில் அவன் அதிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் மீண்டும் தனிமையில் செய்தேன். 2004ம் ஆண்டு சட் ரூமிற்கு வழமையாக வருபவர்களில் யாரையாவது அமர்தலாம் என்று என்னினேன். அப்போது சட்டில் King of Chat என்ற பெயரில் வந்த ஒருவரையே அமர்த்தினேன். அவருடைய உதவி நன்றாக கிடைத்தது.

யார் முதல் User? யார் முதல் Admin? யார் முதல் Moderator? யார் முதல் VIP?

நான் தான் முதல் User. நான் தான் Admin. ஆனால் என்னைவிட்டு சொல்லுவதானால் முதல் அட்மின் பிரியமானவன். அவர் இன்று இல்லை எம்மோடு. முதல் Moderator Swetha கனடாவிலிருந்து வரும் ஒரு பெண். முதல் VIP என்றால் நினைவு இல்லை.

மேலும் விரைவில் இணைக்கப்படும்